தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்-கிறது. நேற்று, மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 69 மனுக்களின் பிரச்-னைகள் தீர்த்து வைக்கப்பட்டது. மேலும், புதிதாக, 42 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆற்றில் அடித்து செல்லப்பட்டவாலிபர் சடலமாக மீட்புகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேர்பட்டியை சேர்ந்தவர் நிஷாந்த், 19. தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஷியாம், 19. நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து மது குடித்தனர். பின் ஆற்றில் குளித்தனர். அப்போது, நிஷாந்த் ஆற்றில் நீரில் இழுத்து செல்லப்-பட்டார். கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறையினர் சென்று நிஷாந்த்தை தேடினர். நேற்று முன்தினம் இரவு வரை தேடி கிடைக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தேடும் பணி நடந்-தது. பல மணி நேர தேடுதலுக்கு பின் நேற்று மதியம், 1:30 மணிக்கு அதே இடத்தில் பாறை இடுக்கில் சிக்கியிருந்த நிஷாந்த்தை சடலமாக மீட்டனர். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.