உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை

தர்மபுரி: கார்த்திகை தீபத்திருவிழாவில், களி மண்ணால் தயாரித்த அகல் விளக்குகள் பயன்படுத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி டவுன், அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் களிமண்ணால் தயாரித்த பஞ்ச முகம், அச்சு விளக்-குகள், பாவை விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகை விளக்குகள் விற்ப-னைக்கு குவிக்கப்பட்டுள்ளன.தர்மபுரி டவுன் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண் விளக்குகள், ஒரு ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் மழை பெய்து வந்ததால், விளக்குகள் விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று முதல் அகல் விளக்குகள் விற்பனை தொடங்கியது. பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். * கார்த்திகை தீபத்தையொட்டி, பல வடிவங்களில் தயாரித்த அகல் விளக்குகள், அரூர் கடைவீதியில் விற்பனை செய்யப்படுகின்றன. பீங்கான் மற்றும் மண் அகல் விளக்குகள், ஒரு ரூபாய் முதல், அதன் அளவு மற்றும் மாடல்களை பொறுத்து, 100 ரூபாய் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரி பழனியம்மாள் தெரிவித்தார். பெண்கள் பலர், ஆர்வத்துடன், அகல் விளக்குகளை வாங்கி செல்வதால், அதன் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை