உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சாமி-நாதன், 40. இவர் அரூர் அடுத்த ஈச்சம்பாடி பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். 2018ல் தன்னுடைய காரில், ஈச்சம்-பாடியில் இருந்து நண்பர்களுடன் ஊத்தங்கரை நோக்கி சென்ற-போது, மாம்பட்டி தனியார் பள்ளி எதிரே, வேலுாரில் இருந்து ஈரோடு சென்ற அரசு பஸ் மோதியது. இதில், காரை ஓட்டி சென்ற சாமிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டு, அரூர் அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது.அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வக்கீல் செல்-வகுமரன் மூலம் ஊத்தங்கரை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், 2021ல், பாதிக்கப்பட்ட சாமிநாத-னுக்கு 24,10,555 ரூபாய் இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று, ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதனால், ஈரோடு கிளையை சார்ந்த அரசு பஸ், நேற்று வேலுாரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில், ஊத்தங்க-ரையில் நீதிமன்றம் உத்தரவுப்படி, நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ