உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு அருங்காட்சியகத்துக்கு மாணவர்கள் களப்பயணம்

அரசு அருங்காட்சியகத்துக்கு மாணவர்கள் களப்பயணம்

தர்மபுரி: தர்மபுரி, டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அரசு அருங்காட்சி-யகத்தில், பழங்கால கல்வெட்டு, நாணயம், ஆயுதம் உள்ளிட்ட ஏராளமானவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, மாவட்டம் முழுவதுமிருந்து, ஏராளமான பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் களப்பயணமாக வந்து பார்த்து செல்-கின்றனர். கல்வெட்டுகளை நேரடியாக கவனிக்கும் மாணவர்கள், அவற்றை தெளிவுடன் புரிந்து கொள்கின்றனர். நேற்று, தர்மபுரி அடுத்த ஏ.கொல்லஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியை சசிரேகா, களப்பயணமாக இந்த அருங்காட்சியகத்துக்கு அழைத்து வந்தி-ருந்தார். அப்போது அவர்களுக்கு அங்கிருந்த கல்வெட்டு மற்றும் பழங்கால ஆயுதம், மண் குடுவை உள்ளிட்டவைகளை காட்டி வகுப்பு நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் முனிராஜ் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி