உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் மீது கார் மோதல் டீ மாஸ்டர் உயிரிழப்பு

பைக் மீது கார் மோதல் டீ மாஸ்டர் உயிரிழப்பு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார், 48. தர்மபுரி பகுதியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த, 23 அன்று காலை, 6:30 மணிக்கு அவருடைய ஹோண்டா ஷைன் பைக்கில், செம்மனஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே சென்றார். அப்போது, பின்னால் வந்த ஹூண்டாய் ஐ20 கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கடத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை