உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் கேட்டு கிராம மக்கள்; ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை

குடிநீர் கேட்டு கிராம மக்கள்; ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த கொண்டகரஹள்ளி ஊராட்சியில், 22 கிராமங்கள் உள்ளன. 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கொண்டகரஹள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்காததால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்திற்கு மேல் ஒகேனக்கல் குடிநீரும் வழங்கவில்லை. புளோரைடு கலந்த தண்ணீரும் வழங்கவில்லை. ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடப்பதால், புகார் தெரிவிக்கவும் முடியாமல் உள்ளதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் குடிநீர் வழங்கக்கேட்டு நேற்று, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், பொம்மிடி எஸ்.ஐ., மாரப்பன், வி.ஏ.ஓ., கலையரசன், ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை