உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தோளிப்பட்டி ஊராட்சியில் குறைந்த வாக்காளர்கள்

தோளிப்பட்டி ஊராட்சியில் குறைந்த வாக்காளர்கள்

குஜிலியம்பாறை : தோளிப்பட்டி ஊராட்சியில், 527 வாக்காளர்கள் மட்டுமே உள்ளதால், மிக சிறிய ஊராட்சி என்ற பெயரை பெற்றுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியம் தோளிபட்டி ஊராட்சி, மிக சிறிய ஊராட்சியாகும். இங்கு, தோளிபட்டி, ரெங்கபாளையம்புதூர், கொழிஞ்சிவாடி, சலம்பாகவுண்டனூர், தேக்கபிள்ளையூர் என்ற ஐந்து, குக்கிராமங்கள் உள்ளன. 274 ஆண், 253 பெண் என, மொத்தம் 527 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த குக்கிராமத்திற்கு ஒரு தலைவர், ஆறு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் உள்ளதால், அவர்களின் வாக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. 'ஹாஸ்ட்டிலியான' வாக்காளர்கள் என்ற புனை பெயரும், கடந்த தேர்தலில் இருந்து, இப்பகுதி மக்களுக்கு உண்டு. நடப்பு தேர்தலில் சிட்டிங் தலைவர் தங்கராஜ், மற்றும் மாரியப்பன் ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். சிறிய ஊராட்சியாக இருந்தாலும், அரசின் நிதி ஒதுக்கீடுகள் சரியாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு முறையும் போட்டி கடுமையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி