உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம்

ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் (ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ்) சார்பாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட மைய நுாலகத்தில் திண்டுக்கல் வாசகர் வட்டம் சார்பாக குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது. மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை சித்த மருத்துவர்கள் சு.ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர், ரா.பாலமுருகன் இளநிலை ஆராய்ச்சியாளர் பேசுகையில், 'பொதுமக்கள் போலி விளம்பரங்கள், போலி மருந்துகள், போலி வைத்தியர்களை தவிர்த்து அரசு ஆயுஷ் மருத்துவமனைகளில் வழங்கப்படும் பாதுகாப்பான ஆயுஷ் சிகிச்சை முறைகளை பெற்று பயனடையலாம். இது போன்ற செயல்களில் இடுபடுவோரை மாவட்ட ஆயுஷ் மருந்து ஆய்வாளர் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று திண்டுக்கல் வாசகர் வட்டம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் தொடர்ந்து நடைபெறும்' என்றனர். 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை வாசகர் வட்டம் தலைவர் தியாகராசன், செயலாளர்,மாவட்ட மைய நுாலகர் சக்திவேல் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி