உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

பழநி: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி பழநி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட உள்ளது. 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் ,9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், கல்வி வளர்ச்சிக்கு காமராஜரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுத வேண்டும்.இந்போட்டி அருங்காட்சியகத்தில் ஜூலை 15 காலை 10 :00 மணிக்கு நடக்கஉள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் பள்ளி மூலமாக பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் 10 மாணவர்கள் மட்டும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர் என காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ