உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இருளில் சோதனைசாவடி; பரிதவிப்பில் போலீசார்

இருளில் சோதனைசாவடி; பரிதவிப்பில் போலீசார்

பழநி : பழநி அருகே சோதனை சாவடியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் பணியில் உள்ள போலீசார் வேகமாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முடியாத நிலை உள்ளதோடு, அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பழநி அருகே சாமிநாதபுரத்தில் சோதனை சாவடி உள்ளது. இங்கு மின் வசதி இருந்தும் இரவில் இருளில் மூழ்கிறது. இரவு பணியில் ஈடுபடும் போலீசார் எந்த வித பாதுகாப்பும் இன்றி பரிதவிக்கின்றனர். செக் போஸ்ட் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு மினவிளக்கு வசதி இல்லை. வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய முடியாது போலீசார் மிகவும் சிரமத்தில் உள்ளனர். எதிர்வரும் வாகனங்களை சோதனைக்காக நிறுத்த ஒளிரும் குச்சிகள் கூட இல்லை. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகனங்களை நிறுத்துவதிலும் சிரமம் உள்ளது.அலைபேசி டார்ச் லைட்டை உபயோகிப்பதால் வாகனங்களும் போலீசாரை மதிக்காமல் வேகமாக செல்லும் நிலை தொடர்கிறது. சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. சோதனை சாவடி, அதனை சுற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தருவதோடு, போலீசாருக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை