உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்

மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்

திண்டுக்கல் : மாற்றுத்திறனாளிகளை ஒருமையில் பேசி அவமரியாதையாக நடத்தும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியர் நந்தினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாற்றுத்திறனாளி நல அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெயந்தி, செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தனர். பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால் கலெக்டர் அலுவலக ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆ.டி .ஓ., சக்திவேல், டி.எஸ்.பி.,க்கள் உதயகுமார், ரமேஷ், தாசில்தார் வில்சன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி