உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோரங்களில் எரிக்கப்படும் குப்பையால் காட்டுத்தீ; பாதிப்பு நமக்கும் தானே ; கோடைகாலம் என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பு

ரோட்டோரங்களில் எரிக்கப்படும் குப்பையால் காட்டுத்தீ; பாதிப்பு நமக்கும் தானே ; கோடைகாலம் என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பு

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து மீதமாகும் குப்பையை கொட்டுகின்றனர்.நாளடைவில் இக்குப்பை மலை போல் குவிந்து திண்டுக்கல்லின் அழகையே கெடுக்கும் நிலை உருவாகி உள்ளது. மர்ம நபர்கள் குப்பையில் தீவைத்து விட்டு செல்கின்றனர். இந்த தீ மணிக்கணக்கில் எரிந்து ரோடுகளில் செல்வோரை அச்சுறுத்துகிறது. இதிலிருந்து வெளிவரும் கரும்புகையால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். இதன் புகை ரோடு முழுவதையும் மறைத்து எதிரில் வரும் வாகனங்களே தெரியாத சூழலை ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் இருக்க குப்பையில் எரியும் தீ காற்றால் படிப்படியாக அருகிலிருக்கும் மரங்களில் பரவி வீடுகள்,தனியார் நிறுவனங்களில் பரவ பெரும் விபத்துக்களை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பதோடு ரோடுகளில் செல்வோரும் கரும்புகையால் சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். தற்போது கோடை துவங்கும் நிலையில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. இதனால் தானாகவே குப்பையில் தீப்பற்றி எரிகிறது. இதுவும் மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தொடரும் இப்பிரச்னையை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை