உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : சிபிஸ் ரத்து, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடை முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் என்.ஹச்.ஐ.எஸ். காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் தமிழ்கண்ணன் வரவேற்றார். கவுரவத் தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவக்குமார்,மாவட்ட செயலாளர் சரவணக்குமார்,பழநி கல்வி மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட செயலாளர் பாபுபிரேம்குமார், டி.என்.ஹச்.ஹச்.எஸ்.எஸ்.ஏ., மாவட்ட செயலாளர் பிரிட்டோ, டி.என்.ஜி.இ.ஏ.,மாவட்ட தலைவர் முபாரக்அலி, டி.என்.பி.ஜி.டி.ஏ.,முத்துலட்சுமி பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சின்னமுனியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthamarai M A
ஜூன் 15, 2024 12:58

கல்வி காசுக்காக விற்கப்பட கூடாது


Senthamarai M A
ஜூன் 15, 2024 12:57

பள்ளி ஆரம்பித்து நாலு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் போராட்டமா? இவர்களுக்கெல்லாம் வருடம் முழுக்க விடுமுறை விட்டு விடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை