உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்நடை மருத்துவமனைகளில் இல்லை ரேபிஸ் தடுப்பூசி  

கால்நடை மருத்துவமனைகளில் இல்லை ரேபிஸ் தடுப்பூசி  

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் 'ரேபிஸ்' தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வாரத்தில் நிலமை சீராகும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மனிதர்களுக்கு எப்படி தடுப்பூசிகள் நோய்களிலிருந்து காப்பதற்கு மிக முக்கியத் தேவையாக இருக்கிறதோ நாய்களுக்கும் தடுப்பூசிகள் மிக அவசியமானவை. நாய்க்கும், நாய் மூலம் நமக்கும் நோய் பரவுவதிலிருந்து தடுப்பூசிகள் மூலம் பாதுகாத்துக்கொள்ளலாம். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாகச் செலுத்த வேண்டும். கடைசியாக செலுத்திய நாளிலிருந்து ஒராண்டு கணக்கிட்டு அடுத்தாண்டு தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்கின்றன. அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். சில நாட்களாக தடுப்பூசி இல்லை என்ற புகார்கள் எழுந்தன. கால் நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '5 நாட்களாக இல்லை என்பது உண்மைதான். வீட்டு வளர்ப்பு நாய்கள் மட்டுமல்லாது தெருநாய்கள் மட்டும் 800 க்கு மேற்பட்டவற்றிற்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இருந்த 3000 டோஸ்கள் தீர்ந்து விட்டன. மீண்டும் 2000 டோஸ்களுக்கான அனுமதி கோரி உள்ளோம். ஒரு வாரத்திற்குள் தடுப்பூசிகள் வந்துவிடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை