உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் ; திண்டுக்கல் நகரின் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தெடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் நகர் முழுவதும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்,மீன் மார்க்கெட்,சோலைக்கால் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதோடு ரோட்டோரங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ