உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 55 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அக்னிதீர்த்த கிணறு

55 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அக்னிதீர்த்த கிணறு

திண்டுக்கல் : தாடிக்கொம்பு சவுந்திர ராஜ பெருமாள் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான 55 ஆண்டுகளாக செயல்படாமலிருந்த அக்னி தீர்த்த கிணறு நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.திண்டுக்கல் தாடிக்கொம்பில் சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு அக்னிதீர்த்த கிணறு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மன்னர்களால் உருவாக்கப்பட்ட தீர்த்த கிணற்றிலிருந்துதான் சுவாமிக்கு பூஜை செய்வதுதான் வழக்கம். இக்கிணறு 55 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆகம விதிகளின்படி கிணற்று தீர்த்தத்தையே பயன்படுத்த வேண்டுமென பக்தர்களின் நீண்டநாள் வேண்டுகோளாக இருந்த நிலையில் திண்டுக்கல் தீயணைப்பு துறையின் உதவியோடு பிப். மாதத்தில் துார்வாரப்பட்டது. பாரமரிப்பு, இதர பணிகள் முடிந்து நேற்று அக்னி தீர்த்த கிணறு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேகம்,கோயில் விஷேசங்களுக்கும் தேவையான தீர்த்தத்தை இங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம் என அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை