உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

செம்பட்டி, : திண்டுக்கல் நலலாம்பட்டியை சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் சுரேஷ் 32. திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி டூ வீலரில் புறப்பட்டார். ஹெல்மெட் அணியவில்லை. கொடைரோட்டைச் சேர்ந்த இவரது நண்பர் ஜெரால்டு தினேஷ் 22, உடன் சென்றார். நேற்று மாலை 6:00 மணிக்கு வீரசிக்கம்பட்டி விலக்கு அருகே வத்தலகுண்டில் இருந்து செம்பட்டி நோக்கி வந்த வேன் ,டூவீலரில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெரால்டு தினேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை