| ADDED : ஜூலை 05, 2024 05:48 AM
திண்டுக்கல்: ''பெண்களுக்கு அழகைவிட வீரமும், சுயசிந்தனையும் தேவை'' என சுய பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ வலியுறுத்தினார்.திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் யாதுமானவள் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான சுய முன்னேற்றத்துக்கான கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரியின் மென் திறன் மேம்பாட்டு மையம், திண்டுக்கல் குயின்சிட்டி ரோட்டரி, விருதுநகர் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடந்த இதற்கு கல்லுாரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசியதாவது: பெண்களுக்கு அழகை விட வீரமும், சுய சிந்தனையும் தேவை. நிகழ்கால தலைமுறையைவிட எதிர்கால தலைமுறை பெண்கள் கூடுதல் முன்னேற்றம் பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கான பயணத்தை தடைகளைத் தாண்டியும் தொடர வேண்டும் என்றார்.குயின்சிட்டி சங்க நிர்வாகிகள் கவிதா, பார்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மென்திறன் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் செய்திருந்தார்.