| ADDED : ஜூன் 02, 2024 04:19 AM
திருட முயற்சித்தவர் கைதுதிண்டுக்கல் : என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த மியூசிக்கல் கிளாஸ் ஆசிரியர் கிறிஸ்டின் விமல் 32. இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் வைத்து விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட நபர் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து திருட முயற்சி செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் விமலுக்கு தகவல் கொடுக்க அருகிலிருந்தோர் உதவியுடன் திருட முயற்சித்திவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். தாலுகா போலீசார் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த வெங்கடேசன் 22 ,என்பது தெரிந்தது. இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.விழாவில் வாலிபர் பலி வடமதுரை :செங்குறிச்சி கம்பிளியம்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. மர உச்சியை தொடுவதற்கு சிலர் வழக்கு மரத்தின் அடிப்பகுதியில் சில அடி உயரம் வரை கோபுரம் போல் நின்று உதவினர். இதில் பொத்தகணவாய்பட்டி சுப்பிரமணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும் இருவர் கைதுவடமதுரை :சித்துவார்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் விஜயக்குமார் மே 19ல் அய்யலுாரில் இருந்து எரியோடு ரோட்டில் காரில் சென்றபோது இரு இடங்களில் ரோட்டோரம் நின்றிருந்த இருவர் மீது மோதினார். அடுத்து சிறிது துாரம் சென்ற கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அங்கு சென்ற சிலர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞருடன் தகராறு செய்து மிரட்டினர். இதன் வழக்கில் பாலக்குறிச்சி ரமேஷ் 22, கைதான நிலையில் எஸ்.கே.நகர் பாலகுரு 45, காளியப்பன், 48, கைது செய்யப்பட்டுள்ளனர்.