| ADDED : ஜன 18, 2024 06:26 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களில் குவிந்த 300 டன் குப்பையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.ஜன.15 முதல் நேற்று வரை பொங்கல் பண்டிகை திண்டுக்கல் நகரில் கோலாகலாமாக நடந்தது. இதையொட்டி கரும்பு,மஞ்சள் போன்ற பொருட்களை வியாபாரம் செய்ய நகரின் முக்கிய பகுதிகளான திருச்சிரோடு,மதுரை ரோடு,பழநி ரோடு,காந்திமார்க்கெட் சுற்றுப்பகுதிகளில் வியாபாரிகள் தற்காலிகமாக கடைகளை அமைத்தனர். பொது மக்களும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். ரோட்டோரங்களில் கரும்பு,மஞ்சள் போன்ற பொருட்களை விற்ற வியாபாரிகள் கழிவுகளை அப்படியே விட்டு சென்றனர். இதுமட்டுமின்றி 48 வார்டுகளிலும் பொது மக்கள் பொங்கல் போது பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளும் குவிந்தது. இதை தொடர்ந்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகர்நல அலுவலர் முத்துக்குமார்,சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் 400 துாய்மை பணியாளர்கள் மூலம் ஜன.15 முதல் நேற்று வரை மூன்று நாட்கள் ரோட்டோரங்கள்,நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கிய 300 டன் குப்பையை டிராக்டர்,மினிலாரி உள்ளிட்ட 6 வாகனங்கள் மூலம் அகற்றி உள்ளனர்.