உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடியில் அரை குறையாக அமைத்த தார்ரோடு

தாண்டிக்குடியில் அரை குறையாக அமைத்த தார்ரோடு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் தார் ரோடு அமைக்கும் பணி அரைகுறை நிலையில் விடப்பட்டதால் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்களகொம்பு கானல்காடு இடையே கடந்த ஒரு மாதமாக தார் ரோடு அமைக்கும் பணி நடக்கின்றது. ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. ஒரு புறமாக ரோடு அமைத்து எஞ்சிய பகுதி வாரக் கணக்கில் ரோடு அமைக்காததால் இதில் செல்லும் டூவீலர் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இது போன்ற அரைகுறை நிலையில் விடப்பட்ட ரோட்டால் இதுவரை ஏராளமானோர் விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ளனர். நெடுஞ்சாலைத்துறை ரோடு பணிகளை முழுமை பெறாது மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இருந்தபோதும் நாள்தோறும் விபத்துகள் நடப்பது கவலையளிக்கிறது. பாதியில் விடப்பட்ட ரோடை முழுமையாக தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உதவி செயற்பொறியாளர் ராஜன் கூறுகையில்: ஒரு வழி பாதை கொண்ட மலை ரோட்டில் தற்போது ஒரு பக்கமாக ரோடு அமைக்கப்பட்டது. ரோடு முழுமை பெறாத நிலையில் நாள்தோறும் விபத்துக்கள் நடப்பது குறித்து ஒப்பந்ததாரிடம் கூறப்பட்டது. இரு தினங்களில் ரோடு பணிகள் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை