உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் மாட்டு பொங்கல் கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் மாட்டு பொங்கல் கொண்டாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.மாவட்டத்தில் தை இரண்டாம் நாளான நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டினர்.பின்னர் மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கொம்பில் சலங்கை கட்டி அழகு சேர்த்தனர். கழுத்திலும் சலங்கை கட்டி, திருநீறு , குங்குமம் பூசி வழிபாடு நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதோடு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம், பொங்கல் ஊட்டி பண்டிகையை கொண்டாடினர்.மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. குறிப்பாக நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. உணவு, பணமாலை, பூ, சந்தன, ஏலக்காய், வெற்றிலை உட்பட பல்வேறு மாலைகளால் நந்தி பகவானை அலங்கரித்து தரிசனம் செய்தனர். சில கோயில்களில் நந்தி பதிகம் பாடப்பட்டது.திண்டுக்கல் அபிராமின் அம்மன் கோயில் தொடங்கி காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறுமலை பகுதியில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகள் குதிரைகளை குளிப்பாட்டி, வண்ணங்கள் பூசி பொங்கல்,கரும்பு, பழங்கள் படையலிட்டு கொண்டாடினர்.வடமதுரை : வடமதுரை பகுதியில் மாட்டுப்பொங்கலை யொட்டி நகர், கிராமம் எல்லா ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோலம், ஓட்டப்பந்தயம், சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பானை உடைத்தல், கயிறு இழுத்தல் என விளையாட்டுகள் நடந்தன. மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மூலவருக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. காத்திருந்து உற்ஸவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை