உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சேதமடைந்த பண்ணைக்காடு ரோடு வாகன ஓட்டிகள் அவதி

 சேதமடைந்த பண்ணைக்காடு ரோடு வாகன ஓட்டிகள் அவதி

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். 9. கி.மீ.,தொலைவு கொண்ட இந்த ரோடு சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.இதில் தாண்டிக்குடி கடுகுதடி இடையே பல்லாங்குழி பள்ளங்கள் ஏற்பட்டும் பேவர் பிளாக் கற்கள் சிதிலமடைந்து வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.கடுகுதடி அடர்ந்த வனப்பகுதியில் மெயின் ரோடு இருப்பதால் மழை காலங்களில் மழை நீர் மரங்களில் வடிந்த வண்ணம் உள்ளதால் விரைவில் ரோடுகள் சேதமடைகிறது. ரோட்டின் இருபுறமும் அடர்ந்துள்ள செடிகளால் எதிரே வாகனம் தெரியாத நிலையிலும் விபத்துக்கள் தொடர்கின்றன. மேலும் காட்டு யானை, காட்டுமாடு, மான் பன்றி நடமாட்டத்தால் மேலும் அச்சுறுத்தல் தொடர்கிறது. சேதமடைந்த 3. கி.மீ., தொலைவை கடந்து செல்ல தாமதமாவதால் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிராம பகுதிகளை அடைய முடியாத நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சேதமடைந்துள்ள தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை