உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மானிய நிதி திட்ட பணிகள் முடக்கம் நிதி ஒதுக்காததால் வளர்ச்சி கேள்விக்குறி

மானிய நிதி திட்ட பணிகள் முடக்கம் நிதி ஒதுக்காததால் வளர்ச்சி கேள்விக்குறி

குஜிலியம்பாறை : ஊராட்சிகளில் பிற்பட்ட பகுதி மானிய நிதி திட்டத்தில் டெண்டர் விடப்பட்டு, ஒரு ஆண்டாகியும் தொகை ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் பாதியில் முடங்கியுள்ளன.மத்திய அரசு சார்பில், பிற்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் இருந்து, ஊராட்சிகளில் சிமென்ட் ரோடு, தடுப்புசுவர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு, இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தும், நிதி ஒதுக்காதததால் பாதியில் நிற்கின்றன.அரைகுறை: குஜிலியம்பாறை ஒன்றியத்தில், 20 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. கூம்பூர் ஊராட்சி நாகுல்பட்டி, புதூர், கணக்கப்பிள்ளையூர், ஆர்.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில், சிமென்ட் ரோடு அமைக்க மணல், ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால் பணி நிறைவு பெறாமல் கட்டுமான பொருட்கள் வீணாகி கிடக்கின்றன. மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன,' என்றனர். கிராம மேம்பாட்டுக்காக பஞ்சாயத்து ராஜ் மூலம் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இவற்றால் கிராமங்கள் ஓரளவு தன்னிறைவு பெறும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகள் முடங்கி, திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. இத்திட்ட நிதியை ஒதுக்கி, பணிகளை துவக்க அரசு முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை