உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மீண்டும் உள்ளூர் சேனல்கள் மறைமுக செய்தி ஒளிபரப்பு

மீண்டும் உள்ளூர் சேனல்கள் மறைமுக செய்தி ஒளிபரப்பு

பழநி : உள்ளூர் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பின்பலத்துடன் மீண்டும் ஒளிபரப்பை துவக்கியுள்ளன. கேபிள் 'டிவி' மூலம் அனுமதியற்ற உள்ளூர் சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்தந்த பகுதி ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, உள்ளூர் சேனல்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. அவற்றில் செய்தி ஒளிபரப்பு இல்லை; ஆனால், உள்ளாட்சி தேர்தல் பிரசாரம், போலீஸ், அரசு அதிகாரிகளின் பேட்டி என, செய்தியாக அல்லாமல் படக் காட்சிகளாக ஒளிபரப்புகின்றனர். உள்ளூர் சேனல் ஊழியர்கள், தேர்தல் பிரசார ஒளிபரப்பு என்ற பெயரில், 'கல்லா' கட்டி வருகின்றனர்.கூடுதல் வசூல்: அரசு கேபிள் இணைப்புக்கு 70 ரூபாய் என்ற போதிலும், பழநி, ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி பகுதிகளில், 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சில இடங்களில் சந்தா 70, டிபாசிட் 60 ரூபாய் என, வசூல் வேட்டை நடக்கிறது. அரசியல் தலையீடு, அதிகாரிகளின் அலட்சியத்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு, எட்டாக்கனியாகவே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை