உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலை ரோட்டில் தீ தடுப்பு பணி

மலை ரோட்டில் தீ தடுப்பு பணி

தாண்டிக்குடி : தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் கோடை வெயிலில் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி நடந்து வருகிறது. சித்தரேவு மலை ரோட்டில் தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி வருகின்றன. வாகனங்களில் செல்வோரால் எளிதில் தீ பற்றும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க வத்தலக்குண்டு ரேஞ்சர் ராம்குமார் தலைமையில் ரோட்டோர செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி தீ தடுப்பு பணி ,தீ தடுப்பு கோடுகளை அமைத்து பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை