உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பள்ளிகளில் இல்லை துாய்மை பணியாளர்கள்; தொற்று பரவும் கழிப்பறைகளால் மாணவர்கள் அவதி

அரசு பள்ளிகளில் இல்லை துாய்மை பணியாளர்கள்; தொற்று பரவும் கழிப்பறைகளால் மாணவர்கள் அவதி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது புதிய திட்டங்களையும் சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. மாணவர்களுக்கான புத்தகங்கள் முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான உபகரணங்கள் உட்பட பல்வேறு இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. இவை தவிர அரசு பள்ளி மாணவர்களுக்கென 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களின் உயர்கல்விக்காக ஊக்கத்தொகை, கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. இவற்றை நிர்வகிப்பதற்கான கட்டமைப்புகள், பள்ளி, பராமரிப்பு மானியங்கள் போன்றவை வழங்கப்பட்ட போதும், அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால் பல திட்டங்களில் பின்னடைவு நீடிக்கிறது.பெரும்பாலான பள்ளிகளில் முறையான கட்டட உரிமங்கள், சுகாதார சான்றிதழ், தீ பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை இல்லை.பல அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2 ஆயிரம் மாணவர்கள் வரை படிக்கும் சூழல் உள்ளது. இதற்கேற்ப சுகாதாரமான வசதிகள் இல்லை. போதிய கழிப்பறை வசதி இல்லை. சில இடங்களில் பல லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட கழிப்பறைகள் இருந்த போதும், அவற்றை பராமரிப்பதற்கு துாய்மை பணியிடங்கள் நியமிக்கப்படவில்லை. துர்நாற்றம், தொற்று பரவல் போன்ற அபாய சூழலில் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இவற்றை பராமரிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் துாய்மை பணியாளர்களை அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை தேடி ஆசிரியர்கள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகும் அவல நிலையும் நீடிக்கிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பள்ளி பராமரிப்பு மானிய நிதியில் சுகாதார சூழலுக்கான துாய்மை காவலர் பணியிடங்களை தற்காலிகமாக ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை