உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கிணற்றில் மாணவி உடல் கொலையா என விசாரணை

 கிணற்றில் மாணவி உடல் கொலையா என விசாரணை

கோபால்பட்டி: கிணற்றில் பள்ளி மாணவி உடல் மிதந்த நிலையில், கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 14. இவர் அப்பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, வெளியில் செல்வதாக கூறிச்சென்ற அவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில், நத்தம் ரோட்டில் தாதன்குளம் அருகே கிணற்றில் ஜெயஸ்ரீ உடல் மிதந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் சாணார்பட்டி போலீசாரிடம் தெரிவித்தனர். மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை