உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  50 டிசைன்களில் கார்த்திகை விளக்குகள் தயார்

 50 டிசைன்களில் கார்த்திகை விளக்குகள் தயார்

திண்டுக்கல்: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக 50 க்கு மேற்பட்ட டிசைன்களில் திண்டுக்கல் பகுதியில் சுடுமண் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா டிச.3ல் நடக்கிறது. திண்டுக்கல், சுற்றுப்பகுதிகளான நொச்சி ஓடைப்பட்டி, வேடப்பட்டி, நல்லாம்பட்டி போன்ற பகுதிகளில் களிமண் விநாயகர் சிலை, கொலு பொம்மைகள், குடில்கள், விளக்குகள் தயார் செய்வர். தற்போது கார்த்திகைக்காக சிறிய விளக்குகள் முதல் பெரிய குத்துவிளக்குகள் வரை மண்ணால் செய்யப்பட்டு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சிறிய விளக்கு, தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, லட்சுமி விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு, குபேர விளக்கு என பல்வேறு வகை தயாராகி வருகிறது. விளக்கு உற்பத்தியாளர் கஜேந்திரன் கூறியதாவது: மெழுகு, உலோகம் என பல விளக்குகள் வந்தாலும் களிமண்ணால் செய்யக்கூடிய விளக்குகளுக்கு மவுசு குறையவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை