உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல்

விபத்தில் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டட தொழிலாளி பலியான சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க வலியுறுத்தி உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ். இவர் நேற்று மாலை வேலை முடித்து வத்தலக்குண்டு நிலக்கோட்டை ரோட்டில் வீடு திரும்பினார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். போலீசார் விசாரிக்கும் நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி சுரேஷின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வாகனம் கண்டுபிடிக்கப்படும் என கூறியதை ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கு மேலாக மறியல் தொடர்ந்தது. போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை