உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / -வாக்கிங் சென்ற ஆசிரியர் மயங்கி விழுந்ததில் சாவு

-வாக்கிங் சென்ற ஆசிரியர் மயங்கி விழுந்ததில் சாவு

ஈரோடு, ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்தவர் சுதீர்குமார், 36; திண்டல் வித்யா நகர் தேவி அவன்யூவில் மனைவி சுஜாதாவுடன் தங்கி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சுதீர்குமார் தினந்தோறும் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வாக்கிங் சென்று விட்டு வீட்டருகே வந்தபோது மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்