| ADDED : ஜூலை 20, 2024 07:12 AM
நம்பியூர் : நம்பியூர் அருகே பூசாரிபாளையம், எம்.ஜி.ஆர்.நகர் காலனியை சேர்ந்த ராமன் மனைவி பழனாள், 72; அஞ்சானுார் ஊராட்சி துாய்மை பணியாளர். இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்-ளனர். மூன்று மகள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. செல்-லம்மாள், 32, என்பவர், காது கேளாத, வாய் பேச முடியாத, கால் ஊனமுடைய மாற்றுத்திறனாளி. திருமணமாகாமல் தாயாருடன் வசித்தார். நேற்று முன்தினம் மாலை மாயமானார்.இதனால் பழனாள் மகளை நேற்று காலை தேடியபோது, அதே பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில், ரமேஷ், 52, வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்படி நம்பியூர் போலீசார் விசா-ரணை நடத்தினர்.போர்வெல் தொழிலாளியான ரமேஷூக்கும், செல்லம்மா-ளுக்கும் தொடர்பு இருந்துள்ளது. வேலை இல்லாத நிலையில் ரமேஷ் அவரது வீட்டுக்கு வரும்போது செல்லம்மாள் பார்க்க செல்வாராம். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார்.இருவரும் தனிமையில் இருந்தபோது, மூச்சுத்திணறி செல்-லம்மாள் இறந்தது தெரிய வந்தது. ரமேஷை கைது செய்த போலீசார், கோபி இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில்ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.