உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாமதமாக வரும் அரசு பஸ் மலை கிராம மக்கள் அவதி

தாமதமாக வரும் அரசு பஸ் மலை கிராம மக்கள் அவதி

சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே தலமலை செல்லும் வழியில் காளிதிம்பம், பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு சத்தி, தாளவாடியில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. தினமும் மாலையில் டெப்போவிலிருந்து டயர்களை ஏற்றி வருவதால், மலை கிராமங்களுக்கு தாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சத்தியமங்கலத்திலிருந்து மாலை, 4:30 மணிக்கு வரவேண்டிய பஸ், டெப்போவுக்கு சென்று டயர்களை ஏற்றிக்கொண்டு, 5:௦௦ மணிக்கு மேல் வருகிறது. திம்பம் போகும் போது, 7:30 மணியாகி விடுகிறது. காளிதிம்பம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அடர்ந்த வனப்பகுதி வழியாக யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட அபாய விலங்குகள் நடமாடும் நேரத்தில், இருளில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பல சமயங்களில் தடசலட்டி, இட்டரை கிராமங்களுக்கு செல்லாமல், சாலை மோசமாக இருப்பதாக கூறி திரும்பி சென்று விடுகின்றனர். இதனால் 4 கி.மீ., துாரம் இருட்டில் போக முடியாத சூழ்நிலையால், பெஜலட்டியிலே ஏதாவது ஒருவர் வீட்டில் தங்கி மறுநாள் காலை செல்கிறோம். இதுதான் தொடர்கதையாக உள்ளது. எனவே சத்தியமங்கலத்திலிருந்து தலமலை வழியாக செல்லும் பஸ்சை வழக்கம் போல் மாலை, 4:30 மணிக்கு இயக்க வேண்டும். இவ்வாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை