உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை அருகே விபத்தில் மாணவன் பலி

சென்னிமலை அருகே விபத்தில் மாணவன் பலி

சென்னிமலை: சென்னிமலை யூனியன், வெள்ளோடு அடுத்துள்ள திருமலைசாமி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது இளைய மகன் சுகேஷ், 18, கோவையில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தார். சுகேஷ் நேற்று காலை, தனது அண்ணன் இளஞ்செழியனின் யமாகா ஆர்.15 என்ற பைக்கில், சென்னிமலை வந்து விட்டு, திரும்பி வெள்ளோடுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அசோகபுரம் என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பைக் கட்டுப்-பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பயணிகள் நிழற்கூ-டத்தின் இரும்பு போஸ்டில் மோதியது. இதில் பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சுகேஷ் உயிரி-ழந்தார்.சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை