| ADDED : ஜூலை 02, 2024 07:26 AM
ஈரோடு : கோபி கவின் கார்டன் எக்ஸ்டன்சன் பகுதியை சேர்ந்தவர் குபேந்-திர பிரபு, 44; கோபி மதுவிலக்கு போலீசார் இவரது வீட்டில் ஆய்வு செய்ததில், 529 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கோபி மதுவிலக்கு போலீசார், எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இதை கலெக்டர் ஏற்றுக் கொண்டதால், குபேந்திர பிரபு மூது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை, மதுவிலக்கு இன்ஸ்-பெக்டர் கலையரசி, குபேந்திர பிரபுவுக்கு நேற்று வழங்கினார்.