உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 700க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்து

700க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்து

ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மாடுகள் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.இதில், 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை; 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 75,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகளும் வரத்தானது.தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரள மாநில வியாபாரிகள், விவசாயிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்தனர். தேர்தல் பறக்கும் படையினர், ஆங்காங்கு வாகன தணிக்கை செய்வதாலும், 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றாலும் பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் குறைவாகவே வந்தனர். இதனால், 60 சதவீத மாடுகளே விற்றன.* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு, 10 எருமை, 130 கலப்பின மாடு, 150 ஜெர்சி மாடுகள், 30 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் கர்நாடகா, கேரள மாநில வியாபாரிகள் வரவில்லை. மேலும் கால்நடைகளின் வரத்தும் பாதியாக சரிந்து விட்டது. விற்பனை ஆகாத நிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை வியாபாரிகள் திரும்ப கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை