| ADDED : மே 08, 2024 02:32 AM
சத்தியமங்கலம்:ஊட்டியிலிருந்து,
17 பயணிகளுடன் பெங்களூரை நோக்கி, தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது.
திருநெல்வேலி, கீழமுன்னீர் பள்ளத்தை சேர்ந்த காசி, பஸ்சை இயக்கினார்.
சத்தியமங்கலத்தை அடுத்த அத்தியப்ப கவுண்டன் புதுார் பிரிவு அருகே,
நேற்று அதிகாலை சென்றது. அப்போது பிரேக் பிடிக்காமல் சாலையோரம்
நிறுத்தப்பட்டிருந்த தார் தயாரிக்கும் இயந்திரத்தில் மோதி
பக்கவாட்டில் கவிழ்ந்தது. பஸ் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக
தப்பினர். சத்தி போலீசார், பஸ் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.
பிறகு கிரேன் உதவியுடன் பஸ்சை அப்புறப்படுத்தினர்.