உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர் உள்பட 3 பேர் மாயம்

மாணவர் உள்பட 3 பேர் மாயம்

ஈரோடு, ஆக. 23-ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் மகன் ஹரி கேசவன், 13; தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். குறும்பு செய்வதாகவும், பிற மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பள்ளி தரப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மகனை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய சிறுவன், வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் மாயமாகி விட்டார். சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.* சத்தி நகராட்சி பள்ளி வடக்கு வீதியை சேர்ந்த கலீல் பாஷா மகன், சத்தியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளிவாசலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.* ஆசனுார் அருகேயுள்ள ஒங்கல்வாடியை சேர்ந்த சரவணன் மகள் மணிமேகலை, 23; ஆசனுார் வனச்சரக அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 17ம் தேதி வேலைக்கு சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. சரவணன் புகாரின்படி ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ