உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்

அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்

ஈரோடு: கோவையில் இருந்து ஈரோட்டுக்கு எஸ்.பி.டி., தனியார் பஸ் புறப்பட்டது. நேற்று மாலை, 6:00 மணியளவில் பெருந்துறை சாலை 24 கேர் மருத்துவமனை பகுதியில், பஸ் அதிவேகத்தில் வந்தது. அப்போது முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணித்த, 5 ஆண்கள், 3 பெண்கள் காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக அருகில் இருந்த 24 கேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி