உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடி விழுந்து குடிசையில் தீ;தப்பிய விவசாயி குடும்பம்

இடி விழுந்து குடிசையில் தீ;தப்பிய விவசாயி குடும்பம்

பவானி:அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை, ஒண்டிக்காரன் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 51; குடும்பத்தினருடன் தோட்டத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. அப்போது குடிசை வீட்டில் இடி விழுந்து தீப்பிடித்தது. இதைக் கண்ட ராஜேந்திரன், மனைவி, மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்ததில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி