உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடன் தொல்லையால் தீக்குளித்த வாலிபர் சாவு

கடன் தொல்லையால் தீக்குளித்த வாலிபர் சாவு

கோபி:கோபி அருகே கடன் தொல்லையால், தீக்குளித்த காய்கறி வியாபாரி இறந்தார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முகமது ஹனீபா, 25; கோபி அருகே பச்சைமலை சாலையில் காய்கறி கடை நடத்தி வந்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால், மன உளைச்சலில் இருந்தார். கடந்த, 13ம் தேதி வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ஹனீபா நேற்று இறந்தார். கடன் தொல்லையால், மனம் வெறுத்து தீக்குளித்து இறந்து போனதாக, தந்தை சாகுல் ஹமீது கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை