உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காதலுடன் செல்வதாக கடிதம் எழுதி விட்டு பெண் மாயம்

காதலுடன் செல்வதாக கடிதம் எழுதி விட்டு பெண் மாயம்

பவானி: சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் இ.எம்.எஸ். நகரை சேர்ந்-தவர் குருசாமி, 54; தோல் தொழிற்சாலை தொழிலாளி. இவரது மகள் தேன்மொழி, 21. பட்டதாரி. நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்து வெளியேறிய தேன்மொழி, எனக்கு என் காத-லுடன் திருமணமாகிவிட்டது, வீட்டை விட்டு வெளியேறும் என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு சென்றார்.இந்நிலையில், நேற்று சித்தோடு போலீசில் அவரது தந்தை குரு-சாமி கொடுத்த புகார்படி தேன்மொழியை தேடி வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் மழைஈரோடுஈரோட்டில் அதிகபட்சமாக, 18.20 மி.மீ., மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக லேசான மழை பரவ-லாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): ஈரோடு, 18.20, கொடுமுடி, 2, பவானி, 8.60, அம்மாபேட்டை, 15.60, வரட்டுபள்ளம் அணை, 4.40, கோபி, 5.20, கொடிவேரி அணை, 6.20, குண்டேரிபள்ளம் அணை, 2.80, சத்தியமங்கலம், 10 மி.மீ., மழை பெய்தது. மழையால் மாவட்டத்தில் வெப்பம் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை