உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொண்டையம்பாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல் முயற்சி

கொண்டையம்பாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல் முயற்சி

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில், இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் முறையாக நடக்கவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்து வந்த அப்பகுதி மக்கள், 40க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பங்களாபுதுார் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ