உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிறைவேற்றப்படாத கோரிக்கைகளால் கறிக்கோழி உற்பத்தியாளர் ஏமாற்றம்

நிறைவேற்றப்படாத கோரிக்கைகளால் கறிக்கோழி உற்பத்தியாளர் ஏமாற்றம்

பல்லடம்: திருப்பூர், கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. தொழிலை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு கோரிக்கைகளை எதிர்நோக்கி இத்தொழில் உள்ளது. பத்து ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதன்படி கோழிகளின் முக்கிய தீவனமாக உள்ள சோயா மற்றும் மக்காச்சோள உற்பத்தியை தமிழகத்தில் அதிகப்படுத்த வேண்டும்.தமிழகத்தில், மக்காச்சோளத்துக்கு விதிக்கப்படும் ஒரு சதவீத செஸ் வரியை நீக்க வேண்டும். கறிக்கோழி கழிவுகளை பயன்படுத்தும் வகையில், தாலுகா வாரியாக கழிவுப்பொருள் மேலாண்மையை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்துணவுடன் கறிக்கோழிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ