உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்

அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே கோடேபாளையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உடல் நலக்குறைவால் இறந்தார். பெண்ணின் குடும்பத்துக்கு, அமைச்சர் முத்துசாமி நேற்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் அமைச்சர் கூறியதாவது:சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதானது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து வருகிறோம். எங்கள் வேட்பாளர் சென்று சோதனை செய்தார். கேமராக்களின் கேபிளில் பழுது ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் அனைத்தும் சரியாக செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், பவானிசாகர் அணையில் இருந்து, வண்டல் மண் எடுப்பது குறித்து, கலெக்டர்தான் ஆய்வு செய்து முடிவு எடுப்பார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை