உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையால் கொப்பரை உலர் களங்களில் பாதிப்பு

மழையால் கொப்பரை உலர் களங்களில் பாதிப்பு

காங்கேயம்: காங்கேயம், வெள்ளகோவில், முத்துார், குண்டடம் பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட கொப்பரை தேங்காயை உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இவற்றில் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களைச் சார்ந்த, 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் காங்கேயம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. இதனால் கொப்பரை உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. உலர வைப்பதற்காக களத்தில் குவித்த கொப்பரை, தார்ப்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை