உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரம் தாழ்ந்து பேசும் தி.மு.க., - எம்.பி., தாராபுரத்தில் அர்ஜூன் சம்பத் குமுறல்

தரம் தாழ்ந்து பேசும் தி.மு.க., - எம்.பி., தாராபுரத்தில் அர்ஜூன் சம்பத் குமுறல்

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையத்தில் உள்ள கரிய காளியம்மன் கோவிலுக்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று வந்தார். கோவிலில் தரிசனம் செய்த பிறகு அவர் கூறியதாவது:இந்த கோவிலை நிர்வகித்து வரும் நிர்வாகி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கோவிலுக்கு நிறைய சொத்துக்கள், நகைகள் உள்ளன. இதில் முறைகேடு நடக்காதபடி, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தரம் தாழ்ந்த வகையில் பேசும், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.,யுமான தயாநிதி மீது, எப்.ஐ.ஆர்., போட முடியாதா? ஆனால், இந்து இயக்கத்தினர் மீது மட்டும் வழக்கு பாய்கிறது. இதை நாங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். பேச்சாளர் சுகி சிவம், பழநியில் உள்ளது முருகரா, போகரா என, சர்ச்சையாக பேசுவது கண்டிக்கத்தக்கது. அரசு நடத்தும் மாநாட்டின் பெயரே முருக பக்தர்கள் மாநாடு என்பதுதான். சாதி ஒழிய, குலதெய்வ வழிபாடு வேண்டும் என்கிறார். குலதெய்வ வழிபாட்டுக்கும், சாதிக்கும் என்ன சம்பந்தம். குலதெய்வ வழிபாடு செய்யாதவன் எப்படி இந்துவாக இருக்க முடியும். இது நமது பண்பாடு, பாரம்பரியம். இதுபோல், அவர் பேசுவதை இனி மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை