உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் திருடர் ஆதிக்கத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்

மொபைல் திருடர் ஆதிக்கத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்

ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் சமீப காலமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரமாக மாறி வருகிறது. உல்லாசத்துக்கு அழைப்பவர்கள், திருநங்கைகள், வழிப்பறி நபர்கள், ஓரின சேர்க்கையாளர்களின் இடமாக நள்ளிரவு நேரங்களில் செயல்படுகிறது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் ஈரோடு டவுன் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.டவுன் கிரைம் பிரிவில் ஐந்து போலீசார் மட்டுமே உள்ளனர். அதில் இருவர் தற்போது விடுமுறையில் சென்றுள்ளனர். மூவர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் பகல், இரவு ரோந்து கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு போலீசாரையும் ரோந்து, கண்காணிப்பு பணியில் பார்ப்பது அரிதாக உள்ளது.இதனால் இரவு நேரங்களில் வழிப்பறி நபர்கள், சமூக விரோதிகள், பயணிகள் கண் சற்று அயரும் நேரத்தில் மொபைல்போன், விலை உயர்ந்த பொருட்களை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மட்டும், 8 மொபைல்போன்கள், மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டதாக போலீசாருக்கு புகார் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி பயணிகள் கூறியதாவது: போலீசார் எண்ணிக்கையை பஸ் ஸ்டாண்டில் அதிகரித்து, ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சமூக விரோதிகள், வழிப்பறி நபர்கள், திருடர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை