உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்

நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி -அரக்-கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலிங்கராயன் கால்-வாயை ஒட்டியுள்ள, கோணவாய்க்கால், பெருமாள் மலை, சுண்-ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், வெண்டி-பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 90 முதல் 120 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய ஐ.ஆர் .20, 39, டி.பி.டி., பொன்னி, டீலக்ஸ் பொன்னி, பவானி உள்ளிட்ட நெல் ரகங்களை அதிகம் விதைப்பு செய்து வருகின்-றனர்.குறிப்பாக நேரடி நெல்விதைப்பு செய்ய, நிலங்களில் இயற்கை உரங்களான கால்நடை கழிவை தெளித்து, உழுது, நேரடி நெல் விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை