உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சங்கங்களின் ஓட்டுகளுக்கு கட்சிகளிடையே கடும் போட்டி

சங்கங்களின் ஓட்டுகளுக்கு கட்சிகளிடையே கடும் போட்டி

புன்செய்புளியம்பட்டி:நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில், நீலகிரி மாவட்டத்தில் குன்னுார், ஊட்டி, கூடலுார் சட்டசபை தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் தொகுதியும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி சட்டசபை தொகுதி உள்ளது. இதில் நான்கு சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.,விடமும், இரு தொகுதிகள் தி.மு.க., கூட்டணி வசமும் உள்ளது.தி.மு.க.,வில் ராஜா, அ.தி.மு.க.,வில் லோகேஷ் தமிழ் செல்வன், பா.ஜ.,வில் மத்திய இணை அமைச்சர் முருகன் உட்பட, 16 பேர் களத்தில் உள்ளனர். மும்முனை போட்டியாக தேர்தல் களம் மாறிய நிலையில் தி.மு.க., - அ.தி.மு.க., - பாஜ., வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., வேட்பாளரான ராஜா ஏற்கனவே எம்.பி., மற்றும் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொகுதியில் நன்கு பரிச்சயமானவர் என்பதால், ஓட்டுகளை பெற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், தனபால், பண்ணாரி பக்கபலமாக உள்ளனர். பா.ஜ., வேட்பாளர் முருகனும், தேர்தல் யுக்திகளை கையாளுவதில் தனித்துவம் வாய்ந்தவர் என்பதால் ஓட்டுகளை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.இதனிடையே தி.மு.க., - அ.தி.மு.க.,- பா.ஜ., கட்சி நிர்வாகிகள் தொகுதியில் உள்ள பல்வேறு சமூகங்களின் முக்கிய நிர்வாகிகள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலாளர் சங்கத்தினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆதரவு கேட்டு வேட்பாளர்கள் அடுத்தடுத்து வருவதால், சங்க நிர்வாகிகள் திக்குமுக்காடி போயுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை